
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வசூர்யா என்பவர் பள்ளக்கால் புதுக்குடிஅரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
சாதிக் கயிறு கட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவருக்கும் ப்ளஸ் 1 படிக்கும் மாணவர்களான சைபுதீன், பவுசில் சமீர், சுடலை மணி ஆகிய மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் செல்வசூர்யா கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் 3 மாணவர்கள் மீதும் கொலை உள்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன் மற்றும் ஷீபா பாக்கியமேரி ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உத்தரவிட்டுள்ளார்.