முல்லைப் பெரியாறு வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி காங்கிரஸ் எம்.பி மனு!!

முல்லைப் பெரியாறு வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க  கோரி காங்கிரஸ் எம்.பி மனு!!

முல்லைப் பெரியாறு வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் எனக் கோரி இடுக்கி நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஓன் குரியாகோஸ் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் முல்லைப்பெரியாறு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும எனவும்,  முல்லைபெரியாறு அணையை ஆய்வு செய்ய சுதந்திரமான ஒரு குழு அமைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பருவ மழை காலமான ஜூலை முதல் செப்டம்பர் வரை அணையின் நீர் மட்டத்தை 130 அடியாக தேக்க உத்தரவிடக்கோரிய கேரளாவை சேர்ந்த பல்வேறு அமைப்புக்கள்  தொடர்ந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் எனவும் குரியாகோஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.  அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கும், ரப்பர் பயிர்களுக்கும் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை காரணம் காட்டி காப்பீடு மறுக்கப்படுவதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ள குரியாகோஸ், முல்லைப்பெரியாறு அணையின் கீழ் பாசன பகுதியில் வசிக்கும் ஒரு குடிமகன் என்ற காரணத்தின் அடிப்படையிலும், இடுக்கி  நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.