மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி...! அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த அமைச்சர்..!

திண்டிவனத்தில் மழை நீர் செல்லும் கால்வாய் அமைக்கும் பணியை சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி.மஸ்தான் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். மேலும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி...! அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த அமைச்சர்..!

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் செல்லும் கால்வாய்கள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால், மழைக்காலங்களில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர். மேலும், மழை நீரோடு கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசி வந்ததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

இது குறித்து சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி.
மாஸ்தனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் 
அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு ரூ.1 கோடியே 61 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் இன்று  திண்டிவனத்தில் மழை நீர் செல்லும் கால்வாய்கள் அமைக்கும் பணியை சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி.மஸ்தான் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பின்பு திண்டிவனம் பகுதிகளில் கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட வேண்டிய பகுதிகளையும், புதியதாக கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டிய பகுதிகளையும்  ஆய்வு செய்தார்.

இதேபோன்று திண்டிவனம் இந்திரா காந்தி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற, தற்காலிக பயணிகள் நிழற்குடையை பார்வையிட்டு விரைவில் பணிகளை முடிக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.