விநாயகர் சதுர்த்தி விழாவில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்...!

திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பது குறித்து பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழாவில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்...!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில்,  சிலை வைப்பது மற்றும் கரைப்பது குறித்து சட்டம் ஒழுங்கு பராமரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறையினர் மற்றும் அனைத்து  மதங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், விநாயகர்சிலை வைத்து வழிபாடு செய்து ஊர்லவமாக எடுத்துச்சென்று, விநாயகர் சிலைகளை கரைக்கும் விழாக்குழுவினர், அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி நடத்தவேண்டும். விநாயகர் சிலை தூய களிமண்ணால் தயாரிக்கவேண்டும். மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டோ பாலிஸ்  மற்றும் தடைசெய்யப்பட்ட வர்ணங்கள் பூசப்பட்டு சிலைகள் தயாரிக்க கூடாது என்று கூறியுள்ளார். மேலும், பள்ளிவாசல், கிறிஸ்துவ ஆலயம் முதலிய பிற மதத்தினரின் சமய தளங்கள் அருகில் இல்லாதவாறு சிலைகள் அமைக்க வேண்டும், ஒவ்வொரு சிலைகளின் பாதுகாப்பிற்கும் பொறுப்பான மூன்று பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும், கரைக்கப்படும் வரை இருவரை சிலை அருகில் காவலுக்கு வைக்க வேண்டும், சிலை கரைப்பு நிகழ்ச்சி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் காவல்துறை கண்காணிப்பாளர் கூறிய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொண்டனர்.