தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்...!

தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்...!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

பொதுவாக மழைக்காலங்களில் பல்வேறு காய்ச்சல்கள் பரவுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவன் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்ததால் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரம், பொதுப்பணித்துறை மற்றும் துறைச்சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

டெங்கு கொசு ஒழிப்பில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்றும், டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com