கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி தமிழகத்தின் சில பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இதன்படி , நாகர்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு:

குறிப்பாக, பூதப்பாண்டி, தோவாளை, கொட்டாரம், மயிலாடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கும்பப் பூ சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் ,குழித்துறை ,தக்கலை , மார்த்தாண்டம் , குலசேகரம் ஆகிய பகுதிகளில்  வானம் முழுக்க மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு விட்டு விட்டு , கனமழை பெய்துவருகிறது.

மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி:

இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கேரளாவில் மிக கன மழை பெய்து வருவதால் ,  எல்லை பகுதிகளில் மாவட்டத்தின் பிற பகுதிகளை விடஅதிகன மழை பெய்து வருகிறது.