
சிறுபான்மையினா் குறித்து சா்ச்சைக்குாிய கருத்துகளை தொிவித்த நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
மணிப்பூர் வன்முறை குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் பேசுகையில்,.. கிறுஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியா்கள் குறித்து சா்ச்சைக்குாிய கருத்துகளை தொிவித்ததாக திராவிட நட்பு கழகம் உள்பட பல்வேறு தரப்பினா் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்போில் போலீசாா் சீமான் மீது, கலகத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிாிவுகளின் போில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க | "சீமான் கடும் சொற்களை தவிா்க்க வேண்டும்" - கே.எஸ். அழகிரி கண்டனம்.