ஜனவரி 9...ஆளுநர் மாளிகைக்கு திடீர் விசிட் அடித்த அப்பாவு...ஆர்.என்.ரவிக்கு அழைப்பு!

ஜனவரி 9...ஆளுநர் மாளிகைக்கு திடீர் விசிட் அடித்த அப்பாவு...ஆர்.என்.ரவிக்கு அழைப்பு!
Published on
Updated on
1 min read

அடுத்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற ஜனவர் 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். 

ஜனவரி 9:

2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்றும், சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடக்கும் என்பது குறித்தும் ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

நேரடி ஒளிபரப்பு:

தொடர்ந்து பேசி்ய அவர், ஆளுநர் உரை மற்றும் கேள்வி நேரம் மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், கூட்டத்தொடரின் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகியோருக்கு இடையே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்த அப்பாவு:

இந்நிலையில், அடுத்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று முறைப்படி நேரில் சந்தித்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அழைப்பு விடுத்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com