குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை படம் பிடித்த நபரின் செல்போன் பறிமுதல்...

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தை படம் பிடித்த நபரின் கைபேசியை போலிசார் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை படம் பிடித்த நபரின் செல்போன் பறிமுதல்...
Published on
Updated on
1 min read

குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8ஆம் தேதி, முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் உயரதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயரதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஹெலிகாப்டர் விபத்தை படம் பிடித்த நபரின் கைபேசியை போலீசார் பறிமுதல் செய்து கோவை தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும், சம்பவ இடத்தில் மின்சாரத் துறையின் உயரழுத்த மின் கம்பிகள் மற்றும் உயர் மின்னழுத்த துருவங்கள் ஏதேனும் உள்ளதா, அவற்றில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா எனவும் சோதனை செய்ய கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் சம்பவ இடத்தில் அப்போதைய வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையத்திற்கு நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com