அதிமுக தலைமை அலுவலக சீல் அகற்றப்பட்டதற்கான நகல்.. இபிஎஸ்-க்கு வழங்கிய மயிலாப்பூர் வட்டாட்சியர்!!

அதிமுக தலைமை அலுவலக சீல் அகற்றப்பட்டதற்கான நகல்.. இபிஎஸ்-க்கு வழங்கிய மயிலாப்பூர் வட்டாட்சியர்!!

அதிமுக தலைமை அலுவலக சீல் அகற்றப்பட்டதற்கான நகலை எடப்பாடி பழனிச்சாமியிடம் மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெயஜீவன் ராம் வழங்கினார்.

அதிமுக அலுவலகத்திற்கு சீல்:

கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற நாளன்று எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதால் அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

அலுவலக சாவியை ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவு:

இதையடுத்து சீலை அகற்றக் கோரிய இபிஎஸ் ஓபிஎஸ் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த உயர் நீதிமன்றம் அலுவலக சாவியை ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க  உத்தரவிட்டது.

நகலை பெற்றுக் கொண்ட இபிஎஸ்:

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி சீல் அகற்றப்பட்டு அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சாவி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சீல் அகற்றப்பட்டதற்கான நகலை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெயஜீவன் ராமிடம் இருந்து இபிஎஸ் கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டார்.