வி.ஐ.டி கல்லூரியில் 31 மாணவர்களுக்கு கொரோனா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வி.ஐ.டி கல்லூரியில் 31 மாணவர்களுக்கு கொரோனா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு வி.ஐ.டி கல்லூரியில் 31 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை மையம், புனரமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் மாணவர் நூலகத்தை  மா.சுப்பிரமணி யன் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்க ளுக்கு தேவையான மருத்துவ நடவடிக்கைகளை செய்வதற்கு பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

செங்கல்பட்டு விஐடி கல்லூரியில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தவர்கள் என்றும், ஏற்கனவே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் புதிய பாதிப்பு இல்லை எனவும் தெளிவுப்படுத்தினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com