தமிழகத்தில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பாற்றல்... மூன்றாம் கட்ட செரோ சர்வே முடிவுகள்... 

தமிழகத்தில் மூன்றாவது கட்டமாக நடைபெற்ற SERO சர்வே முடிவுகளில் 70 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பாற்றல்... மூன்றாம் கட்ட செரோ சர்வே முடிவுகள்... 

மூன்றாவது கட்ட SERO சர்வேயானது, மாநகராட்சிகள் , கிராமங்கள், அதிகம்  தொற்று பாதித்த பகுதிகள் எனப் பல்வேறு பகுதிகளில் 24 ஆயிரத்து 586 மாதிரிகளை சேகரித்து மேற்கொள்ளப்பட்டது

இந்த சோதனையில் மொத்த மாதிரிகளில் 70 சதவீதத்தினர், அதாவது 17 ஆயிரத்து 90 பேர் கொரோனேவுக்கு எதிரான எதிர்ப்பாற்றலை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 84 சதவீதத்தினரும், அடுத்தபடியாக சென்னை தென்காசி, தேனி, மதுரை  மாவட்டங்களின் 75 சதவீதம் பேரும் நோய் எதிர்ப்பாற்றலைப் பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் , நீலகிரி , அரியலூர் , கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் கீழ் நோய் எதிர்ப்பாற்றல் கண்டறியபட்டுள்ளது.

குறைந்தபட்சமாக கரூர் மாவட்டத்தில் 51 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான நோய் தடுப்பாற்றலைப் பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

60 சதவீதத்திற்கும் கீழ் எதிர்ப்பாற்றல் கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.