தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மூவாயிரத்து 500-க்கும் கீழே குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து 3 ஆயிரத்து 479 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து மூவாயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 73 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை தொற்று காரணமாக மொத்தம் 33 ஆயிரத்து 132 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 34 ஆயிரத்து 477 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் தொற்று பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 3 ஆயிரத்து 855 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 24 லட்சத்து 35 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 407பேருக்கும், ஈரோட்டில் 311 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 209 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.