தமிழகத்தில் புதிதாக 1,933 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தோரில் 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 1,933 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை ஏற்படலாம் என அச்சப்படும் நிலையில், கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு புதிதாக ஆயிரத்து 933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அரசு மருத்துவமனைகளில் 22 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 12 பேரும் உயிரிழந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு இதுவரை மொத்தமாக 34 ஆயிரத்து 462 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து புதிதாக ஆயிரத்து 887 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 411ஆக உள்ளது. சென்னையில் புதிதாக 211 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் அதிகபட்சமாக 236 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.