தமிழகத்தில் 1,259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் புதிதாக 1,259 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது  

தமிழகத்தில் 1,259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழக சுகாதார துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழகத்தில் 1,259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 83 ஆயிரத்தை கடந்துள்ளது. 

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரேநாளில் ஆயிரத்து 438 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அதேபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 20 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 35 ஆயிரத்து 853ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு 15 ஆயிரத்து 451 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 163 பேரும், கோவையில் 143 பேரும், செங்கல்பட்டில் 95 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.