தமிழகத்தில் இன்று புதிதாக 1,140 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று புதிதாக ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1,140 பேருக்கு கொரோனா தொற்று

 இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று புதிதாக ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 089 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்து 4 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 26,44,805 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. மேலும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர் களின் எண்ணிக்கை 147 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.