15 மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு!!

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில்,  கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.

15 மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு!!

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில்,  கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.

கொரோனா 2வது அலை பரவலுக்கு பின், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். அதன் பயனாக மாவட்டங்கள் வாரியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.  

இந்தநிலையில் கட்டுக்குள் இருந்த தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கடலூரில் 102 ஆக இருந்த தொற்று தொற்று பாதிப்பு 127 ஆக உயர்ந்துள்ளது. 
இதேபோல் கள்ளக்குறிச்சியிலும் 115 பேர் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று கூடுதலாக 13 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

மேலும், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. தஞ்சாவூரில் மட்டும் கூடுதலாக 51 பேர் பாதிக்கப்பட்டு, தொற்று எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.