தமிழகத்தில் புதிதாக 1,303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் புதிதாக 1,303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த  24 மணி நேரத்தில் 1,303 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 79 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் ஆயிரத்து 428 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரு நாளில் 13 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 35 ஆயிரத்து 796ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு 15 ஆயிரத்து 992 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 168 பேரும், கோவையில் 128 பேரும், செங்கல்பட்டில் 98 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.