ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில்...லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை...!

ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில்...லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை...!

ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகராட்சி ஆணையராக உள்ள சிவக்குமார், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றி இருந்தார். இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய போது, முறைகேட்டில் ஈடுபட்டதாக சிவக்குமார் மீது புகார்கள் எழுந்தன.

இதையும் படிக்க : ஆன்லைன் சூதாட்டம் குறித்த சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு! மத்திய அரசு ஒப்புதல்!!

அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.