கவுன்டிங் மிஷின் இருப்பது எனக்கு தெரியாது... வானதி சீனிவாசன் விளக்கம்...

"கவுண்டிங் மிஷின்"  புகைப்படம் எழுப்பிய சர்ச்சை குறித்து, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

கவுன்டிங் மிஷின் இருப்பது எனக்கு தெரியாது... வானதி சீனிவாசன் விளக்கம்...

கோவையில்,  காணொலி காட்சி மூலம் ஒரு கூட்டத்தில் பங்கேற்ற வானதி சீனிவாசனின் அருகில் பணம் என்னும் கவுண்டிங் மெஷின் இருந்தது. இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இது குறித்து, வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மக்களை சந்தித்து விட்டு வீட்டுக்கு வர நேரம் இல்லாததால்,  நண்பரின் அலுவலகத்தில் இருந்து, காணொலி கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், இது தனது அலுவலகம் அல்ல எனவும் கூறியுள்ளார். கவுண்டிங் மெஷின் இருப்பதும் தனக்கு தெரியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.