பயிர் காப்பீடு: தமிழக அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்...!

பயிர் காப்பீடு: தமிழக அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்...!

கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை  நீக்கி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருவர்கூட விடுபடாமல், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை காப்பீட்டுத் திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும் என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஈபிஎஸ் அறிக்கை: 

தமிழகத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிவாரணம் பெற்றுத் தராத திமுக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தீவிரவாத தாக்குதல் என்று சொன்னேன்...!

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஏக்கர் ஒன்றுக்கு 250 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக விவசாயிகள் கூறுவதாக பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

திருவாருர் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பீடு வழங்கப் படவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி புகார் தெரிவித்துள்ளார்.  மேலும், கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை களைந்து அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.