2 வயது குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள்..!

60 தையல்கள் போடப்பட்டு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை..!
2 வயது குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள்..!
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர்கள் சேகர் - தமிழரசி. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளான்.  அந்த குழந்தை கடந்த ஒரு மாதமாக சேகர் தாத்தா வீட்டில் இருந்துள்ளார். அவருடைய தாத்தா சேகர் கடந்த சில தினங்கள் முன்பு  நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள கோல்டன் பீச்   பூங்காவிற்கு பேரனை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது குழந்தை தண்ணீர் கேட்வே, தண்ணீர் பாட்டிலை எடுத்து வருவதற்குள், அங்கிருந்த தெருநாய்கள் குழந்தையை சூழ்ந்து வெறித்தனமாக கடித்து குதறியது.  நீண்ட போராட்டத்திற்கு பிறகு குழந்தையை மீட்டு  பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மிக மோசமாக நாய்களால் கடித்துக் குதறப்பட்ட சிறுவனுக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட இடங்களில் தையல் போடப்பட்டு காண்போரை கண்கலங்க வைக்கிறது.

இந்த நிலையில் குழந்தையின் தாய் தமிழரசி, ஒரு உருக்கமான பதிவு ஒன்றை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் என் குழந்தைக்கு ஏற்பட்டது போல் எந்த குழந்தைக்கும் வரக்கூடாது என்றும், தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com