நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் விரைவில் குறைப்பு!?  

பள்ளிகள் திறப்பு தாமதமாகும் சூழலில், நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் விரைவில் குறைப்பு!?   

பள்ளிகள் திறப்பு தாமதமாகும் சூழலில், நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனிலும், கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளைத் தொடங்க ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

சென்னை DPI வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ( SCERT ) இயக்குநர் லதா, தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். பள்ளிகள் திறக்கப்படாத சூழலைக் கருத்தில்கொண்டு கடந்த கல்வியாண்டைப் போலவே, நடப்பு கல்வியாண்டிலும் பாடத்திட்டம் குறைக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்த நிலையில், எத்தனை சதவிகித பாடங்களை குறைக்கலாம்? என்பது தொடர்பாக இன்று கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். விரைவில் பாடத்திட்டம் குறைப்பு பற்றிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது