காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தல்..!

காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தல்..!

பொதுமக்களிடம் எதிர்மறை அணுகுமுறையை கைவிடுத்து நேர்மறையான அணுகுமுறையுடன் பழகுவதை வாடிக்கையாக்க வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து காவல்துறையினருக்கும் அறிவுரை கூறி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் போது காவல்துறையினர் அதிருப்தியை வெளிப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். 

மேலும், சில காவல்துறையினர் அதிகாரத்தின் உச்சத்தில் தாங்களே இருப்பதாகவும், தாங்கள் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என கருதுவதாகவும் டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: 2024 ல் பாஜக வெற்றி பெற்றால்...என்னை சுட்டு கொல்லும்...திருமாவளவன் பேச்சு!

இது பொதுமக்கள் மனதில் காவல்துறை மீதான நம்பிக்கையை குறைக்கும் எனவும், எந்தவொரு பதவியும் அதிகாரத்திற்கானதல்ல எனவும் மக்களுக்கான சேவையாற்றவே அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு காவல்துறையினரும் இறுதி அதிகாரம் படைத்தவர் இல்லை என்பதை உணர்ந்து, தவறு செய்தால் கேள்வி கேட்க தங்களுக்கு மேல் உயர் அதிகாரிகள், நீதிமன்றம், ஆணையம் போன்றவைகள் உள்ளதை அறிந்து நடக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தியுள்ளார்.