நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 6 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தி.மு.க..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 6ஆம் கட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் :  6 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தி.மு.க..!
Published on
Updated on
1 min read

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், இடப்பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், 6ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி நகராட்சிகள்,  மேல்பட்டாம்பாக்கம், ஒரத்தநாடு, வல்லம், திருவையாறு, மேலதிருப்பூந்துருத்தி பேரூராட்சிகள் மற்றும் செஞ்சி, அனந்தபுரம், மரக்காணம், தொரப்பாடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 

மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல், பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com