திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்து வெளியான தகவல் என்ன..?

திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்து வெளியான தகவல் என்ன..?

திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் தொடர்பாக, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  

விரைவில் திமுகவின் உட்கட்சி பொதுத்தேர்தல்:

திமுகவின் 15 வது உட்கட்சி பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ஆம் தேதி தொடங்கி, 25ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

22 ஆம் தேதி:

அதன்படி, வரும் 22ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது. 

23 ஆம் தேதி:

வரும் 23ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், வரும் 24ஆம் தேதி புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது. 

25 ஆம் தேதி:

இதேபோல் வரும் 25ஆம் தேதி வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.

ஆலோசனை கூட்டம்:

இந்நிலையில், தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சி தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

அக்டோபர் 2வது வாரத்தில் பொதுக்குழு கூட்டம்:

இக்கூட்டத்தில், நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பொதுக்குழுவை கூட்டுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து, வரும் அக்டோபர் மாதம் 2வது வாரத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com