இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டன் உயிரிழப்பு... 

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டன் உயிரிழப்பு... 

மேட்டூர் அடுத்த தாளையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக முன்னாள்  ஒன்றிய விவசாய அமைப்பாளர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அடுத்த பி. என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு  தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி திமுக  முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஜானகி என்ற மனைவியும் மணி ,ரத்னவேல் என்ற இரண்டு மகன்கள் உண்டு. இவர் திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார். மேலும் திமுக  ஆட்சியின் போது பல்வேறு போராட்டங்களில்  கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர் மு .கருணாநிதி கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். 

"வீழ்ந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்"தமிழ்மொழியே நமது உயிர், மூச்சு மற்றும் நமது எதிர்காலம் ஹிந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு என்பது அரசியலமைப்புக்கு எதிரானது ,இந்திய ஜனாதிபதி மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் இப்பரிந்துரையை ஏற்கக் கூடாது என்று தமிழக சட்டசபையில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கினார்,மற்ற மன்றங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டின் போது அத்தகைய தீர்மானத்தின் தேவையை அவர் காணவில்லை என்றும் கூறினார்.ஒருவரின் தாய்மொழி மிகவும் முக்கியமானது,தமிழ்நாட்டில் தமிழ் இருக்க வேறு மொழி எதற்கு என பலர் தரப்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.தமிழ்நாட்டில் தமிழ்மொழி தான் தாய் மொழி இந்தி மொழியை என் திணிக்க வேண்டும் என்று சர்ச்சைகள் கிளம்பியது.


இந்நிலையில் மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் இந்தி திணிப்பை கையில் எடுத்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கவேல் பி. என் .பட்டி பேரூராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு தாழையூர்  திமுக கட்சி அலுவலகத்தில் இன்று 11 மணி அளவில் கேனில் பெட்ரோல் வாங்கி வந்து உடலில் ஊற்றி தீப்பற்ற வைத்துக் கொண்டு அதே இடத்தில் உயிழந்தார். மேலும் தீப்பற்ற வைக்கும் முன்பு ஒரு வெள்ளைத் தாளில் வாசகம் ஒன்று எழுதியுள்ளார் அதில் "மோடி அரசே மத்திய அரசே" "அவசர இந்தி வேண்டாம் ,தாய்மொழி தமிழ் இருக்க இந்தி  கோமாளி எதுக்கு" , இந்தி எழுத்து மாணவ மாணவிகள் வாழ்க்கையை  பாதிக்கும், "இந்தி ஒழிக, இந்தி ஒழிக" என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள | கண்டிப்பாக 100% ஆதார் எண் இணைக்க வேண்டும்...!