தொடங்கியது திமுக தொழில்நுட்ப அணி நேர்காணல்.. மூன்று நாட்கள், 9 மாவட்டங்கள் பங்கேற்பு..!

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - துணை ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தொடங்கியது..!

தொடங்கியது திமுக தொழில்நுட்ப அணி நேர்காணல்.. மூன்று நாட்கள், 9 மாவட்டங்கள் பங்கேற்பு..!

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறுகிறது.

திமுகவின் அமைப்பு ரீதியிலான மாவட்டங்களை சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை என 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நேர்காணல் நடைபெறுகிறது. முதல்நாளான இன்று தஞ்சை, நெல்லை, வேலூர், மதுரை ஆகிய மண்டலங்களை சேர்ந்த மாவட்டங்களுக்கு நடைபெறுகிறது.

மேலும் படிக்க | மலத்தை அள்ளி வீசியும் தன் சேவையை தொடர்ந்து செய்த இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரி பாய் பூலே!

இரண்டாவது நாளான நாளை கோவை, காஞ்சி உள்ளிட்ட மண்டலங்களுக்கும், மூன்றாவது நாளான நாளை மறுநாள் சேலம், திருச்சி மற்றும் சென்னை மண்டலங்களுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது. மண்டல வாரியாக நடைபெறும் இந்த நேர்காணலில் மாவட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நேர்காணல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.