நாடாளுமன்றத்தில்  எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில்  எழுப்ப வேண்டிய பிரச்சகைள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில்  எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் திமுக எம்பிக்கள் கூட்டத்திற்கு  அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்தார். 

அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட முன்னணி  நிர்வாகிகள் இந்த கூட்டத்தில்  பங்கேற்றனர். வருகின்ற 29ம் தேதி குளிர்கால கூட்டத்தொடர்  தொடங்க உள்ள நிலையில் திமுக எம்பிக்கள் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாகவும் தமிழகத்தின் கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

நீட் தேர்வில் நிரந்தர விலக்கு வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்பினால் ஏற்பட்ட பகுதிகளுக்கு வெள்ள நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்புவது தொடர்பாகவும் தமிழக நலன் சார்ந்த விஷயங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கபட்டன. கூட்டத்தின் முடிவில்  குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வகையில்  மசோதாவை தாக்கல் செய்ய  வலியுறுத்தி  தீர்மானம் கொண்டு வரப்பட்டது.