தமிழக பிரதமர் வேட்பாளர் 2 பேரை தமிழ்நாடு இழந்துவிட்டது...இதற்கு திமுக தான் காரணம்...அமித்ஷா அதிரடி!

தமிழக பிரதமர் வேட்பாளர் 2 பேரை தமிழ்நாடு இழந்துவிட்டது...இதற்கு திமுக தான் காரணம்...அமித்ஷா அதிரடி!
Published on
Updated on
1 min read

இரு முறை பிரதமர் வேட்பாளரை தமிழ்நாடு இழந்ததற்கு திமுக தான் காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். 

கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு தமிழ்நாடு வந்தடைந்த அமித்ஷா, முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து, சென்னை கோவிலம்பாக்கத்தில் வரும் 2024-ம் மக்களவை தேர்தல் பிரதமர் வேட்பாளர் குறித்து, தென்சென்னை தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழகம் இருளில் உள்ளது என்பதை தமது வருகையின் போதான மின்சார துண்டிப்பு காட்டுவதாக சாடிய அவர்,  காமராஜர், மூப்பனார் ஆகிய இரண்டு பேர் பிரதமராவதை தவற விட்டதற்கு திமுக தான் காரணம் என குற்றம்சாட்டினார். 

வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் எனக் கூறியவர், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற வேண்டும் என நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com