
மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 130 நகராட்சிகளில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வென்று அசத்தியுள்ளது. பரமக்குடி நகராட்சியை 53 ஆண்டுகளுக்குப் பின் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.அ.தி.மு.க. ஒரு நகராட்சியில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்க மற்ற இடங்களில் இழுபறி நிலையே நீடிக்கிறது.
அதேபோல், தேர்தல் நடைபெற்ற 489 பேரூராட்சிகளில் 405 பேரூராட்சிகளின் நிலவரம் வெளியாகியுள்ளது. அதில் தி.மு.க. கூட்டணி 389 பேரூராட்சிகளில் முன்னிலை பெற்றுள்ளது. சாதனை படைத்துள்ளது. எஞ்சிய இடங்களில்தான் அதிமுக, பாஜக மற்றும் பாமகவுக்கான வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பது போன்ற களநிலவரம் காணப்படுகிறது.