ஆளுநரை திரும்ப பெறுவதில் தொடர்ந்து முயற்சிக்கும் திமுக

தமிழ் நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்ப பெறுவதில் ஆர்வம் காட்டும் திமுக அரசு, நேற்று எம்பி வில்சன் மூலமாக தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தனர்.

ஆளுநரை திரும்ப பெறுவதில் தொடர்ந்து முயற்சிக்கும்  திமுக

மாநில ஆளுநர்களை தகுதி நீக்கம் செய்ய அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யகோரும் தனிநபர் மசோதாவை திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.ஒரு பஞ்சாய்த்து உறுப்பினருக்கு கூட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டியிருக்கும் போது, ஒரு மாநிலத்தின் ஆளுநரை தேர்வு செய்வதற்கு குறைந்தபட்ச தரநிலை எதுவும் அமைக்கப்படவில்லை என அந்த மசோதாவில் குறிப்பிட்டுள்ளார் திமுக எம்.பி வில்சன் தமிழக அரசின் 22 மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள ஆளுநருக்கு எதிராக வலிமையான அஸ்திரங்களை திமுக கையில் எடுத்து வருவது அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டு வருகிறது .


கிடப்பில் மசோதாக்கள் 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உள்ளிட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும் ஆளுநர் ரவி, இதில் காலம்தாழ்த்தி வருவதால் திமுக உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. இந்நிலையில் தான் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி வருகிறது திமுக. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான மூவ்களை தொடர்ச்சியாக எடுத்து வைத்து வருகிறது திமுக. முன்னதாக, குடியரசுத் தலைவரிடமும் ஆளுநர் ரவியை திரும்பப் பெற கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


விவாதிக்க அனுமதி மறுப்பு
 நாடாளுமன்ற குளிர்கால கூட்டதொடர் கடந்த 7 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது இந்தநிலையில் டிசம்பர் 8 தேதி மக்களவையில் பேசியச் திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆன்லைன் சூதார்ட்ட தடைசட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் அளிக்காதத்டு தொடர்பாக பேச அனுமதி கேட்டார். இதற்கு அனுமதி மறுக்கபட்டதால் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

|தனிநபர் மசோதா :

 மாநிலங்களவையில் நேற்று திமுக எம்பி விலசன் ஆளுநர் தொடர்பான தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார் அதில் ஆளுநர்களை நியமிக்கும் முறையிலும் நீக்கும் முறையிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் தகுதியான நபர்கள் மட்டுமே ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர் செயல்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டால் அவரை தகுதி நிக்கம் செய்ய வழிமுறை  வகுக்க வேண்டும்.  அதற்கு ஏற்ற வகையில் அரசியல் சாசன் பிரிவு 102,155,156, ஆகியவற்றில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.