திமுக பெற்றது புறவாசல் வெற்றி: ஓபிஎஸ்- இபிஎஸ் கடுமையான விமர்சனம்...

உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி புறவாசல் வழியாக பெற்ற வெற்றி என்று ஓபிஎஸ், இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

திமுக பெற்றது புறவாசல் வெற்றி: ஓபிஎஸ்- இபிஎஸ் கடுமையான விமர்சனம்...

உள்ளாட்சி தேர்தலில்  திமுக அடைந்த வெற்றியை விமர்சித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் திமுக கட்டவிழ்த்துவிட்டதாக  குற்றம்சாட்டியுள்ளனர்.

வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் தி.மு.க. அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் நடத்திய விதிமீறல்களையும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளையும் பட்டியலிட்டால் நாடும் தாங்காது, ஏடும் தாங்காது என விமர்சித்துள்ளனர்.உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக திமுகவின் அராஜக நடவடிக்கைகள் குறித்து புகார் அளித்தும்  எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என ஓபிஎஸ் ஈபிஎஸ் குற்றம்சா்டியுள்ளனர்.

மக்கள் செல்வாக்கை இழந்த போதிலும் 4 மாதங்களிலே சாயம் வெளுத்த நரியாகவும், காலுடைந்த பரியாகவும் இருக்கக்கூடிய தி.மு.க. அரசு,தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காகவும், மக்களிடத்திலே செல்வாக்கு இருக்கிறது என்பதை தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காகவும் இந்தத் தேர்தலில் பல வன்முறைகளை கட்டவிழ்த்தும், தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கைப்பாவையாக மாற்றியும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது என அதிமுக சாடியுள்ளது..