எடப்பாடி பதற்றத்தில் உளறுகிறார் - டி.டி.வி.தினகரன்

எடப்பாடி பதற்றத்தில் உளறுகிறார் - டி.டி.வி.தினகரன்

எடப்பாடி பழனிசாமி பதற்றத்தில் உளறுகிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம், தமராக்கியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்ற அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். 

இதையும் படிக்க : நாளை முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...விழிப்புணர்வு பேரணி நடத்த உத்தரவு.!

அப்போது, தனக்கு லண்டனில் சொத்து இருந்தால் தானே அரசிடம் ஒப்படைத்துவிடுவேன் என்றும், எடப்பாடி பழனிசாமி உளறலுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என சாடினார். 


மேலும், பா.ஜ.கவுடன் கூட்டணியா என்கிற கேள்விக்கு கூட்டணி குறித்து இந்த ஆண்டு இறுதிக்கு பின்னரே முடிவு செய்யப்படும் என்றார்.