அண்ணாமலையின் கருத்திற்கு பதிலடி கொடுத்த டிடிவி தினகரன்!

அண்ணாமலையின் கருத்திற்கு பதிலடி கொடுத்த டிடிவி தினகரன்!
Published on
Updated on
1 min read

தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பேட்டி ஒன்றில், "தமிழ் நாடு ஊழல் நிறைந்த மாநிலமாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவர் செய்த ஊழல்காக நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுள்ளார்" என, 1991-1996க்கு இடைப்பட்ட காலம் குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்தார். இது தொடர்பாக, அதிமுக சார்பில் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு புதியது என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். ஜெயலலிதாவை பற்றி அறியாமல் பேசுகிறார் என கூறியுள்ளார். 

மேலும் இது குறித்து, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு அண்ணாமலையை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," அரசியல் வரலாற்று அறிவு எதுவுமின்றி புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி, அண்ணாமலை வெளிப்படுத்திய கருத்து அவரது அறியாமையும், அனுபவமற்ற தனத்தையும் காட்டுகிறது" என கூறியிருக்கிறார்.  மேலும், " உலக அரசியலையே திரும்பி பார்க்க வைத்தவர் அம்மா எனவும், இவை யாதையும் உணராமல் அரசியல் பக்குவமின்றி அண்ணாமலை பேசிவருவது கடும் கண்டனத்திற்குரியது" எனவும் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com