தமிழகத்தில் மீண்டும் குறைய தொடங்கிய தினசரி கொரோனா பாதிப்பு!!

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு நாளாக அதிகரித்து காணப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, சற்று குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் குறைய தொடங்கிய தினசரி கொரோனா பாதிப்பு!!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. கடந்த பல வாரங்களாகவே தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இரட்டை இலக்க எண்களிலேயே தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வருவது மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. இந்த நிலையில், நேற்றைய கொரோனா பாதிப்பு நேற்று முன்தினத்தை ஒப்பிடுகையில் சற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 51 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 494 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை.  மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 ஆக உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com