தமிழகத்தில் தினசரி பாதிப்பு உயர்வு... புதிதாக 1,697 பேருக்கு கொரோனா...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 653 ஆக பதிவான நிலையில் நேற்று ஆயிரத்து 697 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தினசரி பாதிப்பு உயர்வு... புதிதாக 1,697 பேருக்கு கொரோனா...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.  அதன்படி, தமிழகத்தில் நேற்று ஆயிரத்து 697  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 45 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 16 ஆயிரத்து 969 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 594  பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 93 ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது.  ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 337 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மேலும் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.