தீபாவளி விற்பனை இலக்கு 2.5 டன்... பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் போட்டி...

தீபாவளி பண்டிகைக்கு ஆவின் இனிப்புகள் 2.5 டன் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி விற்பனை இலக்கு 2.5 டன்... பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் போட்டி...

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பாக சிறப்பு இனிப்பு வகைகளின் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சா.மு நாசர் :-

கடந்த ஆண்டு 1.2 கோடிக்கு தான் தீபாவளி பண்டிகைக்கு ஆவின் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது எனவும் வரும் தீபாவளி பண்டிகைக்கு 25 டன் இனிப்புகள் 2.2 கோடிக்கு  விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பபட்டுள்ளது என்றார்.

பால் உற்பத்தி தற்போது அதிகமாக உள்ளது என்றும் 26 லட்சம் நாட்டின் தேவையாக உள்ள நிலையில் உற்பத்தியாளர்கள் இடமிருந்து 36 முதல் 40 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது என்றார். ஆவின் பால் விலை குறைப்பிற்கு பிறகு 1. 70 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது என்று தெரிவித்த அமைச்சர் தற்போது தினமும் 2.70 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது என்றார்.

மேலும் விவசாயிகளிடம் பால் கொள்முதல் முறையாக நடைபெற்றுவருகிறது. சில விவசாயிகள் தனியாரிடம் பால் கொள்முதல் செய்து வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிளான பால் ஆவின் நிறுவனத்திற்கு கொண்டுவருகிறார்கள். அதை ஆவின் நிர்வாகம் ஏற்க மறுக்கும் போது சாலையில் பாலை கொட்டி போரடுவது போல் பாவளா காட்டுகிறார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்தால் மட்டுமே தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் விசாரணை அறிக்கையை முழுமையாக முடிவு பெற்ற பின் அது குறித்து விரிவாக தெரிவிக்கப்படும் என்றார்.