குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் அறிவிப்பு...!

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் அறிவிப்பு...!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் காலியாக உள்ள 92 பதவியிடங்களுக்கான விண்ணப்ப காலம் முடிவு பெற்றது..

குரூப்-1 தேர்வுகள்:

தமிழகத்தில் உள்ள காவல்துணைக் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் தேர்வுகளை நடத்தி காலியிடங்களை நிரப்பப்படும் தேர்வு தான் குரூப் 1 தேர்வு.

92 காலியிடங்கள்:

தமிழகத்தில் காவல்துணைக் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பணிகளில் 92 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக வைக்கப்படும் குரூப் 1 தேர்வு வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: https://malaimurasu. com/posts/cover-story/EPS-and-former-ministers-are-sure-to-go-to-jail

விண்ணப்ப காலம் முடிவு:

வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பிக்கும்  கால அவகாசத்தை தேர்வாணையம் நேற்று வரை கொடுத்திருந்தது. இந்நிலையில், குரூப் 1 தேர்வில் பங்கேற்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை குறித்த விபரம் வெளியாகியுள்ளது. மொத்தம் 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக அந்த விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருத்தங்களுக்கான கால அவகாசம்:

குரூப் 1 தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் வெளியானதையடுத்து, வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்  என டி.எம்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.