இயக்குநருக்கு கொலை மிரட்டல்- பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் புகார்...

கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், போலீஸ் பாதுகாப்பு கேட்டும், இயக்குநர் ஜாக்குவார் தங்கம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இயக்குநருக்கு கொலை மிரட்டல்- பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் புகார்...

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்த மூவர், தன்னையும், குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இயக்குநர் ஜாக்குவார் தங்கம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருந்து வரும் நிலையில், இதில் 4000 பேர்கள் வரை உறுப்பினராக உள்ளனர் என்றும் சில ஆண்டுக்கு முன், சங்கத்தில் துரைசாமி, விஜயராக சக்கரவர்த்தி,  சேகர் ஆகிய மூவரும் உறுப்பினராக இணைந்தனர் என தெரிவித்தார்.

அதன் பின்னர் மூவரும் திரைப்படம் எடுப்பதாக கூறி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டனர் என கூறினார். இதையடுத்து சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட மூவரும் சேர்ந்து,  போலியான லோகோவை பயன்படுத்தி சங்கத்தை சேர்ந்த பல நபர்களிடமும் என் பெயரை பயன்படுத்தி மோசடி செய்து  ஏமாற்றியும் உள்ளதாக கூறினார்.

இது தொடர்பாக கேட்டபோது,  என்னை  கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ மற்றும் அதற்கான  ஆவணத்தை இணைத்து, புகாரில் குறிப்பிட்டு கொடுத்துள்ளதாக ஜாக்குவார் தங்கம் கூறினார்.