கைதான 6 பேரை... நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த... என்.ஐ.ஏ. அதிகாரிகள் எடுத்த முடிவு என்ன?

கைதான 6 பேரை... நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த... என்.ஐ.ஏ. அதிகாரிகள் எடுத்த முடிவு என்ன?

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரை காவலில் எடுத்த விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

கோவை கார் குண்டு வெடிப்பு:

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த மாதம் அதிகாலையில் கார் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற பொறியியல் பட்டதாரி பலியானார். இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தொடங்கியது. விசாரணையில் ஜமேஷா வீட்டிலிருந்து 75 கிலோ வெடி மருந்து மற்றும் ஐ.எஸ். இயக்கம் தொடர்பான குறிப்புகள் கைப்பற்றப்பட்டன.

இதையும் படிக்க: தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர்...!

6 பேர் கைது:

இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாரூதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை தேசிய புலனாய்வு முகமை போலீசார் கைது செய்தனர். கைதுசெய்த 6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 8 தேதி ஆஜர் படுத்தினர்.  வழக்கை விசாரித்த நீதிபதி, 6 பேரையும் 22 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். 

மீண்டும் காவலில் எடுக்க முடிவு:

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு சம்பந்தமாக 6 பேரையும் ஆஜர்படுத்த வேண்டும் என்பதால், அவர்களின் பாதுகாப்பு கருதி ஆறு பேரையும் கோவை சிறையில் இருந்து காணொலி மூலம் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த என்.ஐ.ஏ.அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரை காவலில் எடுத்த விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.