ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இலங்கை கடற்கரையில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை படிப்படியாகக் குறைந்து வரும்நிலையில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கைக் கடற்கரையில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அதன் பின் இது மேற்கு-தென்மேற்கு திசையில் இலங்கை பகுதியை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மீனவர்கள் டிசம்பர் 22 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். டிசம்பர் 25 - ஆம் தேதி தென் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு...! தமிழக மாணவர்களுக்கு சிக்கல்..!