அண்ணாமலைக்கு தக்க பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி...!

அண்ணாமலைக்கு தக்க பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி...!

கோவை கார் விபத்து தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக செந்தில் பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.

சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது:

கோவை கார் விபத்து தொடர்பாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை திமுக மீது குற்றம் சாட்டி பேசினார். இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என சிலர் நினைக்கின்றனர். ஆனால், ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கோவை கார் விபத்து: திமுகவை குற்றம் சாட்டிய அண்ணாமலை...கடிதம் எழுதிய தமிழக பாஜக!யாருக்கு தெரியுமா?

காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது:

கோவையில் சம்பவம் நடந்தவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி, டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்படுவதாக தெரிவித்தார்.

சட்ட நடவடிக்கைகள் பாயும்:

எனவே, அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து,  ‘நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க’ என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் செந்தில் பாலாஜி கடுமையாக பதிவிட்டுள்ளார்.