பழுதடைந்து கிடக்கும் மேல் நீர்நிலை தேக்க தொட்டி.. அச்சம் தெரிவிக்கும் கிராம மக்கள்!!

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் கிராமத்தில் பழுதடைந்து கிடக்கும் மேல் நீர்நிலை தேக்க தொட்டியின் பில்லர்கள்  எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பழுதடைந்து கிடக்கும் மேல் நீர்நிலை தேக்க தொட்டி.. அச்சம் தெரிவிக்கும் கிராம மக்கள்!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.கடந்த 1997ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. நாஞ்சில் கிராம மக்கள் குடிநீர்க்காக இந்த  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால்  முறையான பராமரிப்பின்மை  காரணமாக மேல்நிலை நீர்த்தகத் தொட்டியின் 4 பில்லர்களும் உடைந்து விடும் தருவாயிலும் உள்ளே இருக்கும் கம்பிகள் தெரியும் அளவிற்கு பழுதடைந்துள்ளன.

அதுமட்டுமின்றி இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் இதனை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.