தூத்துக்குடியில் கடைகள் இடிப்பு...! வியாபாரிகள் போராட்டம்...!

தூத்துக்குடியில்  கடைகள் இடிப்பு...! வியாபாரிகள் போராட்டம்...!
Published on
Updated on
1 min read

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில்  கடைகளை  இடிக்க  எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.......

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் ஏற்கனவே இயங்கிவரும் கடைகளை இடித்து விட்டு தற்போது புதிதாக 6.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 250 கடைகள் கொண்ட தினசரி சந்தை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றம் கடைகளை இடிப்பதற்கு தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் இம்மாதம் 14ந்தேதி வரை கடைகளை காலி செய்ய கால அவகாசம் கொடுத்தது. 

அவ்வாறிருக்க, கால அவகாசம் முடிந்த நிலையில் இன்று காலை முதல் கடைகளை இடிக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது. இதற்கு வியாபாரிகளில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 3 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு கடைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com