நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்!

நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்!

சென்னையில் காங்கிரஸ் அட்டவணை பிரிவு சார்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு உடை அணிந்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து இருப்பதையும் விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காததையும் கண்டித்து சென்னை LIC கட்டிடம் முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் SC பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

புதிய கட்டிடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

இதையும் படிக்க : அமைதிப் பேரணி - மல்யுத்த வீரர்கள் வலுக்கட்டாயமாக கைது...!

முன்பே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" என பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் SC பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் கருப்பு உடை அணிந்து மகளிர் அணியினர் உட்பட 50 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மாநில SC பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.