சென்னை மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து இறந்த சிறுவனின் தம்பியான 5 மாத குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர்கள் அய்யனார் சோனியா தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் 4 வயது நிரம்பிய ரக்சன், சில நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிக்க : காயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்...!
இதனை தொடர்ந்து, இறந்த 4 வயது சிறுவனின் தம்பிக்கும் தற்போது டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.