செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்... மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே சரிவர படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை பெற்றோர்கள் கண்டித்தால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்... மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்  அடுத்துள்ள நம்பியூர்ர் அடுத்த குருமந்தூர் மேடு பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல. இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கவிதா என்ற மனைவியும் சந்தோஸ் என்ற மகனும் தக்சன்யா என்ற மகளும் உள்ளனர்.

தக்சன்யா கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் கடந்த வருடத்தில் கொரனா தொற்று காரணமான பள்ளிகள் மூடப்ட்டிருந்த நிலையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று படித்து வந்ததுள்ளார்.


தொடர்ந்து ஒரு சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் திறந்த நிலையில் தக்சன்யா பள்ளிக்கு சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. கொரனா காலத்தில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்க்காக வாங்கிய செல்போனில் தக்சன்யா கேம் விளையாடிக் கொண்டு சரிவர படிக்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு சரிவர படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த தக்சன்யாவை பெற்றோர் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த தக்சன்யா தனது அறைக்கு சென்றுள்ளார்.


காலை வழக்கம் போல் குழந்தைவேல், கவிதா தம்பதி, தனது தோட்டத்திற்கு செல்ல டீ சாப்பிட்டுவிட்டு தக்சன்யாவிற்கும் டீ கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். பின்னர் வெகு நேரமாகியும் தக்சன்யா வீட்டை விட்டு வெளியே வராததாக சந்தேகமடைந்த பெற்றோர், தக்சன்யாவின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.

அங்கு அவர் மின்விசிறியில் தூக்கு மாட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஒடி வந்து தக்சன்யாவை மீட்டு கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.