நீட் தேர்வில் பெயிலானதால் மன உளைச்சல்... கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த மாணவி...

கூடலூரில் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததால் மன உளைச்சலில் இருந்த மாணவி தற்கொலை.

நீட் தேர்வில் பெயிலானதால் மன உளைச்சல்... கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த மாணவி...

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி, பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் அருளனந்தம். இவரது 17 வயது மகள் ஜெயா 12ஆம் வகுப்பு முடித்த நிலையில் இந்த கல்வியாண்டிற்கான நீட் தேர்வை எழுதி இருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அவர் தோல்வி அடைந்திருக்கிறார். இதன் காரணமாக மாணவி தொடர்ந்து மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. 

மனைவியின் நிலையை கண்ட அவரது பெற்றோர்கள் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மாணவியை அனுப்பி இருக்கிறார்கள். அங்கும் மாணவி தொடர்ந்து மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு திருப்பூரிலிருந்து மாணவி கூடலூருக்கு வந்திருக்கிறார். கடந்த 18 ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவருக்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி உயிரிழந்திருக்கிறார். தற்சமயம் மாணவி தற்கொலைக்கு காரணமாக கூறி எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த கடிதத்தில் நீட் தேர்வு தோல்வி காரணமாக தான் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் அதில் இருந்து மீண்டு வர முடியவில்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.