

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியின் விவரங்களை இணையத்தில் தேசிய மருத்துவ ஆணையம் பதிவேற்றம் செய்ததால் வெளிநாட்டு பல்கலைகழகங்களில் உயர்படிப்புக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2015 - 2020 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் மருத்துவ மேற்படிப்பிற்காக வெளிநாடுகளில் சேர இயலாத சூழல் நிலவுகிறது. ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆறு ஆண்டு கால எம் பி பி எஸ் படிப்பை முடிக்கும் முதல் பேட்ச் மாணவர்கள் வெளியேறுகின்றனர். அவர்கள் வெளிநாடுகளில் உயர் படிப்புக்கு விண்ணப்பிக்க முயல்கின்றனர். சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பல்கலைகழகங்கள் விண்ணப்பிக்கும் மாணவர்களின் கல்லூரி விவரங்களை இணையத்தில் சரிபார்த்த பிறகே விண்ணப்பங்களை ஏற்று கொள்வர். ஆனால் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ கல்வி இயக்குநர் பேசுகையில், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யக் கோரி தேசிய மருத்துவ ஆணையத்துக்கு மூன்று முறை எழுதியிருப்பதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார். எம் பி பி எஸ் படிப்பை தொடர்ந்து முதுநிலை படிப்பு நடத்துவதற்கான அங்கீகாரம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கிடைத்துள்ளதால் மாணவர்கள் பதற்றப்பட வேண்டாம் எனவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.